< Back
சினிமா செய்திகள்
Kichcha Sudeep clashes with Upendra - Max release date announced
சினிமா செய்திகள்

உபேந்திராவுடன் மோதும் கிச்சா சுதீப் - 'மேக்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
27 Nov 2024 9:01 PM IST

நடிகர் உபேந்திரா நடித்துள்ள 'யுஐ' படம் அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது

பெங்களூரு,

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது, இவரது நடிப்பில் ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' உருவாகிவருகிறது.

இப்படத்தை விஜய் கார்த்திகேயா இயக்க, வி கிரியேசன்ஸின் கீழ் எஸ். தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் சுதீபா, வரலட்சுமி சரத்குமார், சம்யுக்தா ஹொர்னாட், சுக்ருதா வாக்லே மற்றும் அனிருத் பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில், இப்படத்தில் டீசர் வெளியாகி வைரலானநிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. அதன்படி, 'மேக்ஸ்' படம் அடுத்த மாதம் 25-ம் தேதி கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், நடிகர் உபேந்திரா நடித்துள்ள 'யுஐ' படம் 'மேக்ஸ்' படத்திற்கு 5 நாட்கள் முன்பு அதாவது அடுத்த மாதம் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து, இரு முன்னணி நடிகர்களின் படங்கள் மோதவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்