'கேஜிஎப் 2' இந்திய சினிமாவின் வெற்றி - நடிகர் யாஷை பாராட்டிய சிவகார்த்திகேயன்
|நேற்று கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யாஷை பாராட்டினார்.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது அமரன் பட வெற்றியில் உள்ளார். இப்படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்நிலையில், நேற்று கோவாவில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யாஷை பாராட்டினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'கன்னடத் திரையுலகிற்கு யாஷ் செய்தது விலைமதிப்பற்றது. கேஜிஎப் 1 கன்னடத் துறையின் வெற்றி, ஆனால் கேஜிஎப் 2 இந்தியத் திரையுலகின் வெற்றி. ஒரு நல்ல படம் வரும்போதெல்லாம், நான் அதைப் பார்க்கிறேன், அவர்களின் பணியை நான் மதிக்கிறேன்' என்றார்.
அமரன்' படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்க, படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார். இன்னும் பெயரிடாத இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.