< Back
சினிமா செய்திகள்
இந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் கிருத்தி சனோன்?
சினிமா செய்திகள்

இந்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் கிருத்தி சனோன்?

தினத்தந்தி
|
8 Aug 2024 11:57 AM IST

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் தனுஷ் 3-வது முறையாக இந்தி படத்தில் நடிக்க உள்ளார்.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹாலிவுட், பாலிவுட் படத்திலும் நடித்துவருகிறார்.

தற்போது, தனுஷ் இயக்கி நடித்திருந்த 'ராயன்' திரைப்படம் கடந்த மாதம் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் ராயன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் திருப்பங்களுமாக உருவான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

இதற்கிடையில், தனுஷ் பான் இந்தியா படமாக உருவாகி வரும் 'குபேரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தினை சேகர் கம்முலா இயக்குகிறார். இதற்கு அடுத்ததாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை தனுஷ் இயக்கி நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், ஆனந்த் எல்.ராய் இயக்கிய 'ராஞ்சனா' என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் தனுஷ் அறிமுகமானார். பின்னர் அவரது இயக்கத்திலேயே 'அட்ரங்கி ரே' என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது, ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 3-வது படம் 'தேரே இஸ்க் மேன்'. கலர் எல்லோ புரொடக்சன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் இந்தி நடிகை கிருத்தி சனோன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

மேலும் செய்திகள்