< Back
சினிமா செய்திகள்
கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நிவின் பாலி
சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் நிவின் பாலி

தினத்தந்தி
|
5 Jan 2025 3:29 PM IST

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் 'ரெட்ரோ' எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சூர்யாவும் கார்த்திக் சுப்பராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து சமீபத்தில் தான் சூர்யாவின் 44-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படமானது 2025 கோடையில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. மலையாள நடிகர் நிவின் பாலி மற்றும் தமிழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் கார்த்திக் சுப்பராஜின் அடுத்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்