< Back
சினிமா செய்திகள்
Karthi who did this for the first time for Suriyas Kanguva?
சினிமா செய்திகள்

17 வருட சினிமா வாழ்வில்...'கங்குவா' படத்திற்காக முதல் முறையாக இந்த விஷயத்தை செய்த கார்த்தி?

தினத்தந்தி
|
11 Nov 2024 2:57 PM IST

நேற்று கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லர் வெளியானது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இப்படம் வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், ரிலீஸ் டிரெய்லரை படக்குழு நேற்று வெளியிட்டிருந்தது.

இப்படத்தில் நடிகர் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. இது குறித்து பல இடங்களில் இயக்குனர் சிவா மற்றும் நடிகர் சூர்யா சூசகமாக சில விஷயங்களை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் நேற்று வெளியான கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் டிரெய்லரில் கார்த்தி இருக்கும் காட்சிகள் காட்டப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதில் கார்த்தி முதல் முறையாக புகைப்பிடிப்பதுபோல நடித்திருக்கிறார். கார்த்தி தன்னுடைய 17 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை எந்த படத்திலும் புகை பிடிப்பதுபோல நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்