'டாணாக்காரன்' பட டைரக்டருடன் இணையும் நடிகர் கார்த்தி
|'டாணாக்காரன்' படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குநரும், நடிகருமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.
சென்னை,
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. காதல், கமர்ஷியல், ஆக்சன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் கார்த்தி நடித்திருக்கிறார். பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு தனது 25 வது படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ராஜூமுருகன் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் அதிகளவில் வரவேற்பை பெறவில்லை.
கார்த்தி நடிக்கும் 26-வது திரைப்படம் வா வாத்தியார். இத்திரைப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். அதேபோல, கார்த்தியின் 27 வது படத்தை '96'படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கி இருக்கிறார். மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். விரைவில் இரண்டு திரைப்படங்களும் திரைக்கு வரவுள்ளன.
இதைத் தொடர்ந்து டாணாக்காரன் படத்தை இயக்கி புகழ் பெற்ற இயக்குநரும், நடிகருமான தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 1960-களில் நடக்கும் கேங்ஸ்டர் கதையை மையப்படுத்தி இத்திரைப்படம் உருவாகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்களுடன் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.