எல்.சி.யு-வை தொடர்ந்து பிரசாந்த் வர்மாவின் பி.வி.சி.யு-வில் இணையும் கார்த்தி?
|'மெய்யழகன்' தெலுங்கில் 'சத்யம் சுந்தரம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது.
சென்னை,
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'மெய்யழகன்'. இப்படம் தெலுங்கில் 'சத்யம் சுந்தரம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தெலுங்கி பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக 'அனுமான்' பட இயக்குனர் பிரசாந்த் வர்மா கலந்து கொண்டிருந்தார். அப்போது பேசிய பிரசாந்த் வர்மா, '
'சில மாதங்களுக்கு சென்னையில் கார்த்தியை சந்தித்தேன். எனது பி.வி.சி.யு-வில் அவரை காண விரும்புகிறேன். ஆனால் அதற்கு இன்னும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை', என்றார்.
பின்னர் பேசிய கார்த்தி, பிரசாந்த் வர்மா சொன்ன கதை தனக்கு பிடித்திருப்பதாகவும், விரைவில் அதற்கான பணிகளில் ஈடுபடவிருப்பதாகவும் கூறினார். இதனையடுத்து விரைவில் பிரசாந்த் வர்மாவின் பி.வி.சி.யு-வில் சூப்பர் ஹீரோவாக கார்த்தியை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாலிவுட்டில் 'மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்' இருப்பதுபோல் தமிழில் 'லோகேஷ் கனகராஜ் சினிமாடிக் யுனிவர்ஸ்'(எல்.சி.யு)உள்ளது. அதேபோல், தெலுங்கிலும் இயக்குனர் பிரசாந்த் வர்மா, தன்னுடைய இயக்கத்தில் வெளியான 'அனுமான்' படத்தின் வெற்றியையடுத்து 'பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ்' (பி.வி.சி.யு) என்ற தலைப்பில் சூப்பர் ஹீரோ படங்களை எடுக்க முடிவெடுத்து 'சிம்பா' என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.