2024-ம் ஆண்டு வெளியான படங்களில் பிடித்தது - பகிர்ந்த சினிமா பிரபலங்கள்
|இந்த ஆண்டு வெளியான படங்களில் தங்கள் மனதை கவர்ந்த படம் எது என்பதை பல்வேறு சினிமா பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர்.
சென்னை,
2024-ம் ஆண்டு முடிவடைய இன்னுல் சில நாட்களே உள்ளன. இந்த சூழலில், இந்த ஆண்டு வெளியான படங்களில் தங்கள் மனதை கவர்ந்த படம் எது என்பதை பல்வேறு சினிமா பிரபலங்கள் பகிர்ந்துள்ளனர். அதன்படி, பேட்டி ஒன்றில், கரீனா கபூர், விக்கி கவுஷல், ராஜ்குமார் ராவ், ஷபானா ஆஸ்மி, கனி குஸ்ருதி, அன்னா பென் மற்றும் பிரதிக் காந்தி ஆகியோர் இந்த வருடத்தில் தங்களுக்குப் பிடித்த இந்தியத் திரைப்படத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.
கரீனா கபூர்
கரீனா கபூர் முதலாவது தேர்ந்தெடுத்தது, கிரண் ராவ் இயக்கி 'லாபதா லேடீஸ்'. இப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. இருப்பினும், அது இறுதிப்பட்டியலில் இடம் பெறவில்லை.
இரண்டாவதாக 'மட்கான் எக்ஸ்பிரஸ்' படத்தை தேர்ந்தெடுத்தார். இதில், பிரதிக் காந்தி, அவினாஷ் திவாரி மற்றும் திவ்யென்னு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மூன்றாவது அவரே நடித்திருந்த 'பக்கிங்ஹாம் மர்டர்ஸ்' படத்தை தேர்ந்தெடுத்தார்.
விக்கி கவுஷல்
விக்கி கவுஷல் முதலில் தேர்ந்தெடுத்தது இந்திய பாக்ஸ் ஆபிஸில் ரூ. 600 கோடியைத் தாண்டிய இந்திப் படமாக ஸ்ட்ரீ 2. இதில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலர் நடித்தனர். மற்ற இரண்டு படங்களும் தென்னிந்திய படங்கள். அதில் ஒன்று தமிழில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான மகாராஜா. மற்றோன்று மஞ்சுமெல் பாய்ஸ்.
ராஜ்குமார் ராவ்
ராஜ்குமார் ராவ் தமிழில் சி பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான 'மெய்யழகன்', பிருத்விராஜின் 'ஆடுஜீவிதம்: தி கோட் லைப்' மற்றும் 'மட்கான் எக்ஸ்பிரஸ்' ஆகிய படங்களை தேர்ந்தெடுத்தார்.
பிரதிக் காந்தி
மட்கான் எக்ஸ்பிரஸ் நடிகர் பிரதிக் காந்தி, பாயல் கபாடியா இயக்கத்தில் வெளியான 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்', இயக்குனர் ஹன்சல் மேத்தாவின் 'தி பக்கிங்ஹாம் மர்டர்ஸ்' மற்றும் 'மகாராஜா' ஆகிய படங்களை தேர்ந்தெடுத்தார்.
ஷபானா ஆஸ்மி
சுசி தலதி இயக்கத்தில் கடந்த 18-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியான 'கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' படத்தை ஷபானா ஆஸ்மி தேர்ந்தெடுத்தார்.
அன்னா பென்
அன்னா பென், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் வெளியான மலையாள திகில் படமான 'பிரம்மயுகம்' மற்றும் சுசி தலதி இயக்கிய வெளியான 'கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' ஆகியவற்றை தேர்ந்தெடுத்தார்.
கனி குஸ்ருதி
'தி ஆல் வி இமேஜின் அஸ் லைட்' மற்றும் 'கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' நடிகை கனி குஸ்ருதி, கிறிஸ்டோ டோமி இயக்கிய மலையாளப் படமான 'உள்ளொழுக்கு', ஆனந்த் ஏகர்ஷி இயக்கிய 'ஆட்டம்' மற்றும் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள 'சிஸ்டர் மிட்நைட்' ஆகிய படங்களை தேர்ந்தெடுத்தார்.