< Back
சினிமா செய்திகள்
Kannappa - Prabhas look leaked: Rs. 5 lakh reward for information
சினிமா செய்திகள்

'கண்ணப்பா' - பிரபாசின் தோற்றம் கசிவு: தகவல் கொடுப்பவருக்கு ரூ. 5 லட்சம்

தினத்தந்தி
|
9 Nov 2024 8:25 PM IST

'கண்ணப்பா' படத்தில் பிரபாஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார்.

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி வரும் புதிய திரைப்படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி உருவாகும் இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் என்ற வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் மோகன்பாபு, சரத்குமார், ஐஸ்வர்யா, காஜல் அகர்வால், அக்சய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், பிரபாஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் தோற்றம் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், சமீபத்தில் பிரபாசின் தோற்றம் இணையத்தில் கசிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி,

இந்த புகைப்படத்தை இணையத்தில் கசிந்தவர் தொடர்பான தகவலை கொடுப்பவருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்