< Back
சினிமா செய்திகள்
நீச்சல் உடையில் ரசிகர்களை அதிர வைத்த கனிகா
சினிமா செய்திகள்

நீச்சல் உடையில் ரசிகர்களை அதிர வைத்த கனிகா

தினத்தந்தி
|
21 July 2024 9:51 PM IST

நீச்சல் உடையில் தற்போது நடிகை கனிகாவும் இணைந்துள்ளார்.

சென்னை,

கதாநாயகிகள் கவர்ச்சிக்கு மாறி வருகிறார்கள். படுக்கை அறை மற்றும் முத்த காட்சிகளில் துணிச்சலாகவும் நடிக்கின்றனர். அதோடு நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்துகின்றனர். இதில் தற்போது நடிகை கனிகாவும் இணைந்துள்ளார். இவர் அஜித்குமாரின் வரலாறு, சேரனின் ஆட்டோகிராப், விஜய்சேதுபதியுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர், சத்யராஜின் வெப்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு மொழியிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார். தொலைக்காட்சி தொடரிலும் நடிக்கிறார்.

இவற்றில் குடும்ப பாங்காக நடித்துள்ள கனிகா திடீரென தனது நீச்சல் உடை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார். கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடைசியில் நீங்களும் பிகினிக்கு மாறி விட்டீர்களா என்று கமெண்ட் பகுதியில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.


மேலும் செய்திகள்