கங்குவா புரமோஷன் : படம் நெருப்பு மாதிரி இருக்கும் - சூர்யா
|துபாயில் நடைபெற்ற கங்குவா படத்தின் புரமோஷனில் நடிகர் சூர்யா ரசிகர்களுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.
துபாய்,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது. 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று இப்படத்தின் ரிலீஸ் டிரெய்லரை படக்குழு வெளியிட்டது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் துபாயில் புரமோஷன் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நடிகர் சூர்யா படத்திற்கு 2 வருடங்கள் ஏன் எடுத்துக் கொண்டோம் என்றால் படம் தரமாகவும், சிறப்பு அமைய வேண்டும் என்று தான் என கூறினார். மேலும், இந்த படம் 'நெருப்பு மாதிரி இருக்கும்' என்றார். பின்னர் அங்குள்ள ரசிகர்களுடன் நடிகர் சூர்யா செல்பி எடுத்து கொண்டார்.