< Back
சினிமா செய்திகள்
கங்குவா படம் : அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள்
சினிமா செய்திகள்

'கங்குவா' படம் : அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்டுகள்

தினத்தந்தி
|
14 Oct 2024 6:41 AM IST

'கங்குவா' திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 'கங்குவா' படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம் வருகிற நவம்பர் 14-ந் தேதி படத்தை வெளியிடுவதாக கங்குவா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 20-ந் தேதி நடைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சில தகவல்களை கூறியுள்ளார். இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவிற்கு பயங்கரமான டைட்டில் கார்டை உருவாக்கியுள்ளார். சூர்யா இப்படத்திற்காக 8 மொழிகளில் அவரே குரல் கொடுத்துள்ளார். மற்ற மொழிகளில் ஏ.ஐ தொழில் நுட்பம் பயன்படுத்தி உள்ளோம். வட இந்தியாவில் 3500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது" என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்