'கங்குவா' படத்தின் 2-வது நாள் வசூல்: அதிகாரபூர்வ அறிவிப்பு
|நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் ரூ.89.32 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள கங்குவா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
சூர்யா திரை வாழ்வில் அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக கங்குவா அமைந்தது. இப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து சூர்யா நடிப்பில் ஒரு பிரம்மாண்டமான இப்படம் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், கங்குவா படம் 2 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் ரூ.89.32 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.