< Back
சினிமா செய்திகள்
கங்குவா திரைப்படம் வெளியானது...ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமா செய்திகள்

'கங்குவா' திரைப்படம் வெளியானது...ரசிகர்கள் கொண்டாட்டம்

தினத்தந்தி
|
14 Nov 2024 12:15 PM IST

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கியது. காலை முதல் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்