< Back
சினிமா செய்திகள்
பாலிவுட்டை விமர்சித்த கங்கனா ரனாவத்
சினிமா செய்திகள்

பாலிவுட்டை விமர்சித்த கங்கனா ரனாவத்

தினத்தந்தி
|
15 Dec 2024 3:14 PM IST

சிக்ஸ் பேக், கவர்ச்சி பாடல்கள்... இதுதான் பாலிவுட் என்று கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.

மும்பை,

கங்கனா ரனாவத் 2006-ம் ஆண்டு கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார். தனது முதல் படம் அபார வெற்றி பெற்றது அதுமட்டுமின்றி சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அடுத்தடுத்து வோ லம்ஹே, பேஷன், குயின் என ஹிட் கொடுத்தார். ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கங்கனா ரனாவத் அண்மையில் அளித்த பேட்டியில், "பாலிவுட்டில் இருப்பவர்கள் ஒரு வட்டத்துக்குள் வாழ்கிறார்கள். பாலிவுட்டில் எனக்கு இருக்கும் முரண்பாடுகளுக்கு இதுவே முக்கியமான காரணம். அவர்கள் இந்த வட்டத்திலிருந்து வெளியேற விரும்புவதில்லை. அவர்களை பொறுத்தவரை ஜிம்முக்குச் செல்ல வேண்டும், புரோட்டீன் ஷேக்ஸ்களை குடிக்க வேண்டும், அதற்கான ஊசிகளை செலுத்தி கொள்ளவேண்டும். அவர்கள் யதார்த்தத்தில் வாழ்வதே கிடையாது.

பாலிவுட்டில் இருந்து யாரும், 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் நடித்ததை போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முன் வர மாட்டார்கள். சிக்ஸ் பேக்ஸ், அழகிய நாயகிகள், பீச், பைக், கவர்ச்சி பாடல்கள் இதை தான் அவர்கள் விரும்புகிறார்கள்" என நடிகை கங்கனா ரனாவத் காட்டமாக பாலிவுட்டை விமர்சித்துள்ளார்.

கங்கனா ரனாவத் இயக்கிய எமர்ஜென்சி படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி வெளியாகிறது.

மேலும் செய்திகள்