< Back
சினிமா செய்திகள்
Kamal Haasan dubs in all five languages for Kalki 2898 AD
சினிமா செய்திகள்

'கல்கி 2898 ஏடி' - கமல்ஹாசன் எத்தனை மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார் தெரியுமா?

தினத்தந்தி
|
26 Jun 2024 7:13 AM IST

'கல்கி 2898 ஏடி' படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார்.

சென்னை,

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்பட பலர் நடிக்கின்றனர். இதில், கமல்ஹாசன் வில்லனாக நடித்துள்ளார்.

கதாநாயகன் பிரபாஸின் அறிமுக வீடியோ சில மாதங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமிதாப் பச்சனின் தோற்றமும் அண்மையில் வெளியானது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பரும் வாகனமுமான "புஜ்ஜி" அறிமுகம் ஆனது.

சமீபத்தில், இப்படத்தின் இரண்டு டிரெய்லர்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகின. இந்த படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் 5 மொழிகளில் டப்பிங் பேசியுள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

மேலும், கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படமும் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்