< Back
சினிமா செய்திகள்
Kamal Haasan and Mani Ratnams Thug Life aims Tamil New Year release in 2025
சினிமா செய்திகள்

தமிழ் புத்தாண்டை குறிவைக்கிறதா கமலின் 'தக் லைப்'?

தினத்தந்தி
|
30 Oct 2024 2:45 PM IST

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'தக் லைப்' படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் திரிஷா, சிம்பு, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதனை படக்குழு வீடியோ வெளியிட்டு தெரிவித்திருந்தது. இதனையடுத்து இப்படம் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்தசூழலில், இப்படத்தை அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாதநிலையில், தமிழ் புத்தாண்டை 'தக் லைப்' படக்குழு குறிவைத்திருப்பதாக மற்றொரு தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தமிழ் புத்தாண்டு அடுத்த ஆண்டு எப்ரல் மாதம் 14-ம் தேதி( திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தொடர்விடுமுறையை கருத்தில் கொண்டு படக்குழு 'தக் லைப்' படத்தை ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்