'இந்தியன் 2' படத்தின் `கதறல்ஸ்' வீடியோ பாடல் வெளியானது
|நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் "கதறல்ஸ்" என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி 'இந்தியன் 2' படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்தியன் முதல் பாகம் இன்னும் பலரால் ரசிக்கப்பட்டு வருகின்ற நிலையில் 'இந்தியன் 2' பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் வைரலாகியது. இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.
இதையடுத்து, 'கதறல்ஸ்' என்ற பாடல் தற்பொழுது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன் 'இந்தியன் 2' படத்தில் இடம்பெற்றுள்ள 'கலேண்டர்' பாடல் வெளியாகி கவனம் பெற்றது..
இந்தியன் 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்தியன் 3 படம் இன்னும் சில மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.