பேபி, லவ் யுவர்செல்ப், சாரி... பிரபல பாடல்களை பாடிய ஜஸ்டின் பீபர்; களைக்கட்டிய சங்கீத் நிகழ்ச்சி
|ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்டின் சங்கீத் நிகழ்ச்சியில் ஜஸ்டின் பீபர் பாடல் கச்சேரி நடத்தினார்.
மும்பை,
உலகப்புகழ் பெற்ற பாப் பாடகர் ஜஸ்டின் பீபருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கனடாவைச் சேர்ந்த ஜஸ்டின் பீபரின் முதல் சிங்கிள் பாடல் 'ஒன் டைம்' கடந்த 2009-ம் ஆண்டு வெளியானது. அப்போது அவருக்கு வயது 15. தொடர்ந்து அடுத்த வருடம் அவரது முதல் ஆல்பம் 'மை வேர்ல்டு' வெளியானது.
இதன் பின்னர் வெளியான அவரது அனைத்து ஆல்பம் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இளம் வயதிலேயே ஜஸ்டின் பீபர் சர்வதேச இசைக் கலைஞராக புகழ் பெற்றார்.
இந்நிலையில், வரும் 12-ம் தேதி நடைபெரும் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணத்திற்கு முன்பாக நேற்று நடைபெற்ற சங்கீத் நிகழ்வில் பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பாடல் கச்சேரி நடத்தினார். அதில், இவரின் பிரபலமான பாடல்களான பேபி, பீச்சஸ், லவ் யுவர்செல்ப், சாரி உள்ளிட்ட பாடல்களை பாடி நிகழ்ச்சியை களைக்கட்டினார்.
இது குறித்தான வீடியோகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இந்த கச்சேரியை நடத்த ஜஸ்டின் பீபருக்கு ரூ. 1 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.