ஜுராசிக் வேர்ல்ட் 4' படத்தில் இணைந்த பிரபல ஹாலிவுட் நடிகர்
|'ஜுராசிக் வேர்ல்ட் 4' அடுத்த வருடம் ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளது.
வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "ஜுராசிக் பார்க்" மற்றும் அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு வெளியான "ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட்" ஆகிய படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார்.
தற்போது இவர் 'ஜுராசிக் வேர்ல்ட் 4' படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார். யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், மேலும் ஒரு ஹாலிவுட் நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளார். அதன்படி, இப்படத்தில் பெச்சிர் சில்வைன் இணைந்திருக்கிறார். இவர் டையரா பிரம் டெட்ராய்ட், பிஎம்எப், பிளாக் சம்மர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் இணைந்திருக்கும் 'ஜுராசிக் வேர்ல்ட் 4' அடுத்த வருடம் ஜூலை மாதம் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது.