வசூலை குவிக்க வரும் 'ஜுமான்ஜி 3' - ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்
|'ஜுமான்ஜி 3' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கடந்த 2017 -ல் வெளியான "ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள்" மற்றும் 2019-ல் வெளியான "ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்" ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜேக் கஸ்டன் தற்போது இதன் அடுத்த பாகமான ஜுமான்ஜி 3 படத்தையும் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், முந்தைய படங்களில் நடித்திருந்த டுவைன் "தி ராக்" ஜான்சன், கரேன் கில்லன், கெவின் ஹார்ட் மற்றும் ஜாக் பிளாக் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, 2026-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளதாக குறிப்பிடத்தக்க தகவல் வெளியாகி உள்ளது. இது ஜுமான்ஜி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
"ஜுமான்ஜி: வெல்கம் டு தி ஜங்கிள்" உலகளவில் $960 மில்லியனுக்கும் மேல் வசூலித்து, 2017 ஆம் ஆண்டின் ஐந்தாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. "ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல்" உலகளவில் $800 மில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனை படைத்தது.