< Back
சினிமா செய்திகள்
உலக புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளர் காலமானார்
சினிமா செய்திகள்

உலக புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளர் காலமானார்

தினத்தந்தி
|
7 July 2024 11:32 AM IST

ஜான் லாண்டவ் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பர் ஆவார்.

வாஷிங்டன்,

ஹாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருந்தவர் ஜான் லாண்டவ். இவர் உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவர் பாராமவுன்ட் உடன் இணைந்து கேம்பஸ் மேன் படத்தின் மூலம் 1987 ம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார்.

இதுவரை உலகளவில் அதிக வசூல் செய்துள்ள டாப் 5 படங்களில் 3 படங்கள் இவர் தயாரித்ததாகும். 'அவதார்' ', 'டைட்டானிக்' மற்றும் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' ஆகியவை ஆகும். இந்நிலையில், ஜான் லாண்டவ் (63) காலமானார். இந்த தகவலை அவரது மகன் ஜேமி லாண்டவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜான் லாண்டவ் 16 மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் உயிரிழந்தார். இவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பர் ஆவார்.

மேலும் செய்திகள்