< Back
சினிமா செய்திகள்
இயக்குனராக புதிய அவதாரம் எடுத்த தக் லைப் பட நடிகர்
சினிமா செய்திகள்

இயக்குனராக புதிய அவதாரம் எடுத்த "தக் லைப்" பட நடிகர்

தினத்தந்தி
|
19 Oct 2024 6:26 PM IST

ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லரை பாராட்டி நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் 'ஜோசப்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் ஆவார். இவர் சூர்யாவின் 44வது படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ் தமிழில் ஜகமே தந்திரம் படத்தில் அறிமுகமானார். தற்போது, கமலுடன் தக் லைப் படத்திலும் நடித்து வருகிறார். இவர் 7 திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது, இயக்குநராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

நடிகர் ஜோஜு ஜார்ஜ், பனி என்ற படத்தினை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடித்தும் உள்ளார். நாடோடிகள் அபிநயா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஜய், சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்கள்.

கேரளாவின் திருச்சூரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையே நடக்கும் பழிவாங்கும் கதையை மையமாக வைத்து இந்த திரில்லர் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் உருவான 'பனி', இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடத்திலும் வெளியாக இருக்கிறது.

'பனி' படத்தின் டிரெய்லரை பாராட்டி நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில். 'டிரெய்லர் பிடித்திருந்தது. இயக்குநராக அறிமுகமாகியுள்ள டியர் ஜோஜு ஜார்ஜுக்கு எனது வாழ்த்துகள்' எனக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்