'கார்த்தியை பார்த்து இந்த விஷயத்தில் பொறாமையாக உள்ளது' - நடிகர் சூர்யா
|பட விழாவில் பேசிய சூர்யா, கார்த்தி மீது பொறாமைப்பட்டதை நினைவுக்கூர்ந்தார்.
சென்னை,
சூர்யா நடிப்பில் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.127 கோடி வசூலித்துள்ளது. நடிகர் சூர்யாயுடன் கார்த்தி முதன்முறையாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த சூழலில், முன்பு நடந்த 'கார்த்தி 25' பட விழாவில் பேசிய சூர்யா, கார்த்தி மீது பொறாமைப்பட்டதை நினைவுக்கூர்ந்தார்.
நடிகர் சூர்யா பேசுகையில், 'கார்த்தி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறார். 'பருத்திவீரன்', 'நான் மகான் அல்ல' போன்ற படங்களில் கார்த்தியின் நடிப்பு இன்றும் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.
என்னை விட கார்த்தியை அதிகம் பிடிக்கும் என்று மக்கள் சொன்னபோது கொஞ்சம் பொறாமைப்பட்டேன். நாங்கள் தளர்ந்த போதெல்லாம் எங்களுக்கு உற்சாகம் கொடுத்து எல்லைகளைக் கடந்து ஓட உந்து சக்தியாக ரசிகர்கள் இருந்துள்ளனர். நீங்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒரு அடையாளத்தை கொடுத்திருக்கிறீர்கள்' என்றார்.