< Back
சினிமா செய்திகள்
ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படத்திற்கு யு சான்றிதழ்
சினிமா செய்திகள்

ஜெயம் ரவியின் 'பிரதர்' திரைப்படத்திற்கு 'யு' சான்றிதழ்

தினத்தந்தி
|
18 Oct 2024 6:02 PM IST

ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சென்னை,

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பான 'பிரதர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கண்டு மகிழக்கூடிய வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது. 'பிரதர்' படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி'க்குப் பிறகு இயக்குனர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றதால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் புரமோசன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கு 'யு' சான்றிதழை வழங்கியுள்ளது தணிக்கை வாரியம். 'யு' சான்றிதழ் பெறும் தமிழ்த் திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில் ஆக்சன் இல்லாத குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படமாக 'பிரதர்' உருவாகியிருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்