இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதை பகிர்ந்த 'ஜவான்' பட நடிகை
|இந்த ஆண்டு முடிவடைய உள்ளநிலையில், இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதை நடிகை ரிதி டோக்ரா பகிர்ந்துள்ளார்
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ரிதி டோக்ரா. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'தி மேரிட் வுமன்' என்ற வெப் தொடரில் நடித்திருந்த இவர் அதே வருடம் 'மும்பை டைரீஸ்' என்ற வெப் தொடரில் நடித்து பிரபலமானார்.
தற்போது இவர் கதாபாத்திரங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதன்படி, ஷாருக்கானின் 'ஜவான்' முதல் விக்ராந்த் மாஸ்ஸியின் 'தி சபர்மதி ரிப்போர்ட்' வரை, ரிதி டோக்ரா வலுவான துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்த ஆண்டு முடிவடைய உள்ளநிலையில், இந்த ஆண்டு எப்படி இருந்தது என்பதை நடிகை ரிதி டோக்ரா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"இந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும்போது சிறப்பாகவே உணர்கிறேன். எனக்கு நடிகையாக ஒரு சிறந்த ஆண்டாக இது இருந்தது. எனது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த வருடம் எனது குடும்பத்தினருடன் நிறைய நேரம் செலவிட்டேன். இது ஒரு சுவாரஸ்யமான ஆண்டாக இருந்தது' என்றார்.