'சூப்பர் கேர்ள்: வுமன் ஆப் டுமாரோ' - வில்லனாக 'அக்வாமேன்' பட நடிகர்
|டிசி நிறுவனம் 'சூப்பர் கேர்ள்: வுமன் ஆப் டுமாரோ' என்ற படத்தை உருவாக்கி வருகிறது.
சென்னை,
ஹாலிவுட்டில் மார்வெல், டிசி நிறுவனங்களின் கீழ் பல்வேறு சூப்பர் ஹீரோ படங்கள் உருவாகி வருகின்றனர். இதற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது டிசி நிறுவனம் 'சூப்பர் கேர்ள்: வுமன் ஆப் டுமாரோ' என்ற படத்தை உருவாக்கி வருகிறது. இதில், சூப்பர் கேர்ளாக மில்லி அல்காக் நடிக்கிறார். இப்படம் 2026-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் சூப்பர்வில்லன் லோபோவாக ஜேசன் மோமோவ் நடிப்பதாக சில நாட்களாக தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், அதனை ஜேசன் மோமோவ் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி ஜேசன் மோமோவ், ' லோபோவை எனக்கு மிகவும் பிடிக்கும். லோபோவாக நடிக்க விரும்புகிறேன். அது சரியான கதாபாத்திரம்' என்றார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஜேம்ஸ் வான் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அக்வாமேன். இத்திரைப்படம் டிசி நிறுவனத்தில் கீழ் உருவாகி இருந்தது. இதில், ஜேசன் மோமோவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.