< Back
சினிமா செய்திகள்
ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் ஜெயிலர் 2 அப்டேட்
சினிமா செய்திகள்

ரஜினியின் பிறந்தநாளில் வெளியாகும் 'ஜெயிலர் 2' அப்டேட்

தினத்தந்தி
|
28 Nov 2024 11:21 AM IST

ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்டை ரஜினியின் பிறந்தநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின்படி 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் படத்திற்காக கதை எழுதும் பணியில் நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுவருகிறார். ஜெயிலர் 2 படத்தின் புரோமோ வீடியோவிற்கான படப்பிடிப்பு பணிகள் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பு பணிகள் ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்தின் பிறந்தநாளான வருகிற டிசம்பர் மாதம் 12-ந் தேதியில் இப்படத்தின் புரோமோ வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்