< Back
சினிமா செய்திகள்
Jackie Chans Karate Kid: Legends trailer goes viral
சினிமா செய்திகள்

ஜாக்கி சானின் 'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
21 Oct 2024 10:36 AM IST

ஜாக்கி சான் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான கராத்தே கிட்டிற்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

சென்னை,

90ஸ் கிட்ஸ்களின் நாயகனாக திகழ்பவர் நடிகர் ஜாக்கி சான். இவர் தி லெஜெண்ட் ஆப் டிரங்கன் மாஸ்டர், போலீஸ் ஸ்டோரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். அவரின் அசாத்திய சண்டை காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இவர் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான கராத்தே கிட்டிற்கு பல ரசிகர்கள் உள்ளனர். 359 மில்லியன் டாலர் வசூலை ஈட்டிய இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதனிடையே, நடிகர் ஜாக்கி சான் திரைப்படங்களில் நடிப்பதை பெருமளவு குறைத்துவிட்டார். ஜாக்கி சான் கடைசியாக நடித்து 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ரைட் ஆன். இந்நிலையில், அடுத்ததாக நடிகர் ஜாக்கி சான்'கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஜாக்கி சான், கராத்தே கிட் படத்தில் நடித்த ஹான் என்ற அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், பென் வாங் லி பாங் என்பவர் புதிய மாணவராக நடிக்கிறார். இவர்களுடன், ஜோசுவா ஜாக்சன், ஷானெட் ரெனீ வில்சன், மிங்-நா வென், அராமிஸ் நைட், சாடி ஸ்டான்லி, வியாட் ஓலெப் மற்றும் ஜெனிபர்-லின் கிறிஸ்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கராத்தே கிட்: லெஜண்ட்ஸ் படம் அடுத்த ஆண்டு மே மாதம் 30-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்