< Back
சினிமா செய்திகள்
It’s exciting to see South films taking the spotlight: Rukmini Vasanth
சினிமா செய்திகள்

'நான் நடிகையாகாமல் இருந்திருந்தால்...'- ருக்மணி வசந்த்

தினத்தந்தி
|
26 Jun 2024 8:27 AM IST

தமிழ் கலாசாரத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பதாக நடிகை ருக்மணி வசந்த் கூறியுள்ளார்.

சென்னை,

கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தமிழில் விஜய்சேதுபதி ஜோடியாக 'ஏஜ்' படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ருக்மணி வசந்த் அளித்துள்ள பேட்டியில் பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை தென்னிந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'கே.ஜி.எப், காந்தாரா, புஷ்பா போன்ற படங்களுக்கு பிறகு அனைவரது பார்வையும் மலையாளம் உள்பட தென்னிந்திய படங்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் வரை தென்னிந்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கின்றன. வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுப்பது நடிகர்-நடிகைகளுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கிறது.

நான் நடிகையாகாமல் இருந்திருந்தால் ஆசிரியையாகி இருப்பேன். சினிமாவுக்கு வந்த பிறகு எனது மொத்த வாழ்க்கையும் மாறிவிட்டது. முதல் படத்தில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. நான் தற்போது தமிழ் படங்களில் நடிப்பதால் தமிழ் மொழியை கற்றுக்கொள்வதிலும், தமிழ் கலாசாரத்தை தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருக்கிறேன்'' என்றார்.

மேலும் செய்திகள்