'மீண்டும் ஸ்டெதாஸ்கோப் அணிந்தது பெருமையாக உள்ளது' - சிவகார்த்திகேயன் பட நடிகை
|ருக்மணி வசந்த் மருத்துவராக நடித்த 2-வது படம் இதுவாகும்.
சென்னை,
கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் தற்போது பஹீரா படத்தை தொடர்ந்து, சிவராஜ்குமாருடன் 'பைரதி ரணகல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
நர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 2017 ம் ஆண்டு பிளாக்பஸ்டர் ஹிட்டான 'முப்தி' படத்தின் தொடர்ச்சியாகும். இதில், சிவராஜ்குமார் வழக்கறிஞராகவும், ருக்மணி வசந்த் மருத்துவராகவும் நடித்துள்ளனர். ருக்மணி வசந்த் மருத்துவராக நடித்த 2-வது படம் இதுவாகும். இதற்கு முன்பு பஹீரா படத்தில் மருத்துவராக நடித்திருந்தார்.
இப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மீண்டும் மருத்துவராக நடித்தது குறித்து ருக்மணி வசந்த் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,
'பஹீராவுக்குப் பிறகு மீண்டும் மருத்துவராக நடித்திருக்கிறேன். மருத்துவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மருத்துவத்தை கற்றுக் கொள்ள ஏழு முதல் எட்டு ஆண்டுகள் ஆகும். இரண்டு படங்களில் அதைக் கற்கமுடியாது
ஆனால், ஸ்டெதாஸ்கோப் அணிவது முதல் பாக்கெட்டில் கருவிகளை எடுத்துச் செல்வது வரை ஒரு மருத்துவரின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். மீண்டும் ஸ்டெதாஸ்கோப் அணிந்தது பெருமையாக உள்ளது' என்றார்.
இப்படத்தை தொடந்து தமிழில் ருக்மணி, விஜய்சேதுபதி ஜோடியாக 'ஏஜ்' படத்திலும், சிவகார்த்திகேயன் ஜோடியாக எஸ்.கே.23 படத்திலும் நடித்து வருகிறார்.