< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'இந்தியில் ரீமேக் செய்ய ஏற்ற படம் அது' - ரஜினி பட நடிகர் கருத்து
|31 Dec 2024 7:12 AM IST
ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
கன்னட சினிமாவில் முண்ணனி நடிகராக இருப்பவர் உபேந்திரா. இவர் தற்போது யுஐ படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 20-ம் தேதி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மறுபுறம் தமிழில், ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் உபேந்திரா, காளிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான 'உபேந்திரா' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக உபேந்திரா தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் உபேந்திரா இதனை கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
''உபேந்திரா'வின் கதை இன்றைய தலைமுறையினரிடம் ஒத்துப்போகும். இப்படத்தில் இருக்கும் எதிர்கால கருத்துக்கள் இன்றைய தலைமுறையினரையும் பார்க்க வைக்கும். இந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கு ஏற்ற படம் இது,'' என்றார்.