< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
'கஷ்டத்தில் இருக்கும்போது எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் மக்கள்' -நிவின் பாலி

21 Jan 2025 11:28 AM IST
நிவின் பாலி தற்போது நயன்தாரா உடன் 'டியர் ஸ்டூடெண்ட்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.
திருவனந்தபுரம்,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நிவின் பாலி. இவர் தற்போது நயன்தாரா உடன் டியர் ஸ்டூடெண்ட்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் நிவின் பாலி, கஷ்டத்தில் தனக்கு ஆதரவாக இருந்த மக்களுக்கு நன்றி கூறினார்
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'சமீபத்தில் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு நான் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை . அப்போது எனக்கு ஆதரவாக நின்றவர்கள் மக்கள்.
அதற்கு நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இது உங்கள் அனைவரும் நன்றி சொல்ல ஏற்ற இடம். அதனால்தான், நான் இங்கு வந்தேன்' என்றார்.