'அது எனக்கு நானே கொடுத்த தண்டனை' - விஜய் தேவரகொண்டா
|விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் அறிமுகமான படம் 'லிகர்'.
சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் பாலிவுட்டில் அறிமுகமான படம் லிகர். இப்படத்தை பூரி ஜெகனாத் இயக்க அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்திருந்தார். இருந்தபோதிலும் இப்படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது.
இப்படத்தோல்விக்கு பின் பேசிய விஜய் தேவரகொண்டா, 'அது எனக்கு நானே கொடுத்த தண்டனை' என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இனி என் படங்கள் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் அதை பற்றிய எந்த விஷயத்தையும் பேசப்போவதில்லை. அது எனக்கு நானே கொடுத்த தண்டனை' என்றார். லிகர் படம் வெளியாவதற்கு முன்பு, இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்று விஜய் தேவரகொண்டா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா கடைசியாக பிரபாஸ், தீபிகா படுகோன், கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் அர்ஜுனனாக கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதனையடுத்து விஜய் தேவரகொண்டா, விடி12 மற்றும் விடி 14 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
இதில், கவுதம் தின்னனுரி இயக்கும் விடி12 படத்தை அடுத்த ஆண்டு மார்ச் 28 அன்று வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.