< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆளுங்கட்சியை எதிர்ப்பது சரியானதுதான் - பார்த்திபன்
சினிமா செய்திகள்

'விஜய் ஆளுங்கட்சியை எதிர்ப்பது சரியானதுதான்' - பார்த்திபன்

தினத்தந்தி
|
26 Nov 2024 7:12 PM IST

ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் விஜய் ஹீரோவாக மாற முடியும் என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் இன்று புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமியை நேரில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது பல்வேறு கேள்விகளுக்கு பார்த்திபன் பதிலளித்தார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் நடிகர் விஜய் பேசியது குறித்து பார்த்திபன் கூறியதாவது;-

"இதை தவிர்க்க முடியாத அரசியலாகவே நான் பார்க்கிறேன். இதற்கு முன்பு நடிகர்கள் அரசியலுக்கு வந்தபோது பல்வேறு விமர்சனங்கள் இருந்தது போலவே, நடிகர் விஜய் மீதும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இருந்தாலும் விஜய்யின் எழுச்சியும், அவரது முதல் மேடைப் பேச்சும் பிரமாதமாக இருந்தது. அடுத்தடுத்து நல்ல முன்னேற்றம் இருக்கிறது.

அதே சமயம், விஜய் ஆளுங்கட்சியை எதிப்பது சரியானதுதான். இன்று யார் ஆட்சியில் இருக்கிறார்களோ அவர்களைத்தான் எதிர்க்க முடியும். எம்.ஜி.ஆரும் அதையே செய்தார். தனிப்பட்ட முறையில் விஜய்க்கு இருக்கும் விருப்பு வெறுப்புகளை மீறி, ஆளுங்கட்சியை எதிர்த்தால்தான் அவர் ஹீரோவாக மாற முடியும்."

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்