'அது மிகவும் வலித்தது'- தேசிய விருது பெற முடிவெடுத்ததற்கான காரணத்தை பகிர்ந்த அல்லு அர்ஜுன்
|புஷ்பா தி ரைஸ் படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அல்லு அர்ஜுன், தேசிய விருது பெற முடிவெடுத்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'யார் யாரெல்லம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்கள் என்ற பட்டியலை பார்த்தேன். அதில், ஒரு தெலுங்கு நடிகர் கூட இல்லை. அது எனக்கு மிகவும் வலித்தது. அதன்பின்னர்தான் தேசிய விருது பெற முடிவு செய்தேன்' என்றார்.