'மன அழுத்தத்தால் இரவு தூங்கமுடியாமல்.. ' - பாலிவுட் நடிகை
|ஆரம்பகாலத்தில் தன்னால் நல்ல நடிகையாக முடியுமா இல்லையா என்று யோசித்ததாக நடிகை பஷ்மினா ரோஷன் கூறினார்.
மும்பை,
பாலிவுட் நடிகை பஷ்மினா ரோஷன். இவர் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் உறவினர் ஆவார். வெளிநாட்டில் தனது கல்லூரி படிப்பை முடித்த இவர், பின்னர் இந்தியாவுக்கு திரும்பினார். அதனைத்தொடர்ந்து, மும்பையில் உள்ள நடிப்பு பள்ளியில் பயிற்சி பெற்றார்.
கடந்த 2019-ம் ஆண்டு 'தி இம்போர்ட்டன்ஸ் ஆப் பீயிங் எர்னஸ்ட்' என்ற நாடகத்தில் நடித்தார். தற்போது இவர் நடிப்பில் வெளியாக உள்ள படம் இஷ்க் விஷ்க் ரீபவுண்ட். இப்படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், ஒரு பேட்டியில் பேசிய பஷ்மினா ரோஷன், மன அழுத்தத்துடன் மதியம் தூங்கியதாக கூறினார். அவர் பேசியதாவது,
ஆரம்பகாலத்தில் என்னால் நல்ல நடிகையாக முடியுமா இல்லையா என்று யோசித்தேன். பின்பு, மார்கெட்டிங் படிக்க விரும்பி இங்கிலாந்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தேன். விசா கிடைத்ததும், அறைகளை முன்பதிவு செய்து சென்றேன். அப்போது மிகவும் மன அழுத்தத்துடன் இருந்தேன். இதனால் இரவு தூங்க முடியாமல் மதியம்தான் தூங்குவேன். இதுவே என் பழக்கமாக இருந்தது. என் நண்பர்கள் பார்ட்டிக்கு செல்வார்கள், எல்லாவற்றையும் செய்வார்கள். மார்கெட்டிங்கில் எனக்கு மன நிறைவு இல்லை. இதற்கு நான் சரியானவளா? என்றெல்லாம் யோசித்ததுண்டு.
இதனால், யார் நான் என்பதை அறிய போட்டோ சூட் செய்து என் புகைப்படத்தை என் அப்பாவிடம் காட்டினேன். அப்போது அவர் எல்லாரிடமும் எதோ ஒரு திறமை உண்டு. அதை அவர்கள் அறிந்து அதற்கு மேலும் மெருகூட்ட வேண்டும் என்றார்.
அதன்பிறகு இந்தியா வந்து நடிப்பு மற்றும் பரத நாட்டிய பள்ளியில் சேர்ந்து அதை கற்றுக்கொண்டேன். பல நிராகரிப்புகளுக்குப் பிறகு, குடும்பத்தினரிடமிருந்து கருத்துகளைப் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு கூறினார்.