< Back
சினிமா செய்திகள்
Is Zendaya joining Christopher Nolans film following Tom Holland?
சினிமா செய்திகள்

டாம் ஹாலண்டை தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலன் படத்தில் இணைந்த ஜெண்டயா?

தினத்தந்தி
|
9 Nov 2024 5:21 PM IST

கிறிஸ்டோபர் நோலனின் 13-வது படத்தில் அன்னே ஹாத்வே மற்றும் ஜெண்டயா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன்.இவர் இயக்கிய படங்களில், அனைவருக்கும் பிடித்தமான படங்களில் முக்கியமானது மெமென்டோ. 2000-ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில், கிறிஸ்டோபர் நோலன் வித்தியாசமான முறையில் தன்னுடைய திரைக்கதையை அணுகியிருந்தார்.

இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'ஓப்பன் ஹெய்மர்'. ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில் சிலியன் மர்பி நடித்த இப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இதனையடுத்து, கிறிஸ்டோபர் நோலன் தனது 13-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், மேட் டாமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் முன்னதாக நோலன் இயக்கத்தில் 2014-ல் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்' மற்றும் 'ஓபன் ஹெய்மர்' படங்களில் நடித்தவர்.

மேலும், 'ஸ்பைடர் மேன்' பட நடிகர் டாம் ஹாலண்டும் இப்படத்தில் நடிக்கிறார். இது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் டாம் ஹாலண்ட் நடிக்கும் முதல் படமாகும். யுனிவர்சல் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து நோலன் மனைவி எம்மா தாமஸ் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி ஐமேக்சில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் அன்னே ஹாத்வே மற்றும் ஜெண்டயா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்னா ஹாத்வே இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டு கிரிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்