< Back
சினிமா செய்திகள்
Is this the villain in Sivakarthikeyans next film?
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் வில்லன் இவரா?

தினத்தந்தி
|
9 March 2025 8:26 AM IST

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ’2018' படத்தை இயக்கிய ஜுட் ஆண்டனி இயக்க இருப்பதாக கூறப்படுறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தற்போது சிவகார்த்திகேயன் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லீ-அல்லு அர்ஜுன் படத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது.

மறுபுறம், கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வெற்றிப்பெற்ற '2018' படத்தை இயக்கிய ஜுட் ஆண்டனி, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுறது. இந்நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக முன்னணி தமிழ் நடிகர் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்