< Back
சினிமா செய்திகள்
Is this the story of LIK?... IMDb that gave Wikki a shock
சினிமா செய்திகள்

''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் கதை இதுதானா?... விக்னேஷுக்கு ஷாக் கொடுத்த ஐ.எம்.டி.பி

தினத்தந்தி
|
12 March 2025 8:06 AM IST

அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற மே மாதம் 16-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை,

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே). இதில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக சீமான் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகிற மே மாதம் 16-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஒன்லைன் இதான் என்று வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி,காதலுக்காக ஹீரோ டைம் டிராவல் செய்து எதிர்காலத்திற்கு செல்வதுதான் ஒன்லைன் என்று ஐ.எம்.டி.பி என்ற சினிமா தளத்தில் போடப்பட்டுள்ளது.

இதை பற்றி படக்குழு உறுதியாக எந்த தகவலையும் வெளியிடாதநிலையில், ஐ.எம்.டி.பியின் இந்த பதிவு படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்