< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
உருவாகிறதா சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகம்?

8 March 2025 7:13 AM IST
கடந்த 2007-ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் 'சென்னை -28'.
சென்னை,
வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான படம் 'சென்னை -28'. இது அவரது முதல் படமாகும். கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு உருவான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, வெங்கட் பிரபு சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படத்தை இயக்கினார்.
பின்னர் 2016-ம் ஆண்டு 'சென்னை- 28' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் வெங்கட்பிரபு. தொடர்ந்து 'மாநாடு, கஸ்டடி, தி கோட்' படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, தற்போது சென்னை- 28 படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த ஜெய், மிர்ச்சி சிவா, நிதின் சத்யா, பிரேம்ஜி ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.