ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 19 வயது நடிகை சாரா அர்ஜுன்? - வெளியான தகவல்
|ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 19 வயதான சாரா அர்ஜுன் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் பேசு பொருளாகியுள்ளது.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். இவர் இயக்குனர் ஆதித்யா தரின் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில், ரன்வீருடன், சஞ்சய் தத், ஆர்.மாதவன் மற்றும் அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் இப்படம் தொடர்பான புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 19 வயதான சாரா அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது வெறும் தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் ரசிகர்களிடையே பேசு பொருளாகி உள்ளது. அதன்படி ரசிகர் ஒருவர், நன்வீர் சிங் நடிப்பில் உருவான "பேண்ட் பாஜா பாராத் வெளியானபோது சாராவுக்கு 5 வயது' என்றும் மற்றொருவர் ' 19 வயதான ஒருவர் 39 வயதுடையவருக்கு ஜோடியா??! இது சரி என்று எப்படி நினைத்தார்கள்' என்றும் விமர்சித்து வருகின்றனர்.
சாரா அர்ஜுன் தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராயின் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.