'சூர்யா 45' படத்தை இயக்குகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? - வெளியான தகவல்
|சூர்யாவின் 45-வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் சூர்யா ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார். நாடு முழுவதும் ரசிகர் பட்டாளத்துடன் இருக்கும் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா இப்படத்தைத்தொடர்ந்து, தனது 44-வது படமாக தற்காலிகமாக 'சூர்யா 44' என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், சூர்யாவின் 45-வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளதாகவும், இசையமைப்பாளராக அனிருத் அல்லது ஏ.ஆர்.ரகுமான் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.