2 பாகங்களாக வெளியாகிறதா மகேஷ் பாபுவின் எஸ்.எஸ்.எம்.பி 29 ?
|மகேஷ் பாபுவின் எஸ்.எஸ்.எம்.பி 29 படம் 2 பாகங்களாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபுவை வைத்து 'எஸ்எஸ்எம்பி29' படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மகேஷ் பாபு தனது தோற்றத்தை மாற்றி உள்ளார். மேலும், இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார். தற்போது, இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மகேஷ் பாபுவின் எஸ்.எஸ்.எம்.பி 29 படம் 2 பாகங்களாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் மகேஷுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகையை நடிக்க வைக்க ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.