எனது விருப்பத்திற்கு எதிராக... திருமண நாளில் அதிதி செய்த காரியம் பற்றி சித்தார்த் பேட்டி
|நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் திருமணத்திற்கு முன் சேர்ந்து, வோக் என்ற செய்தி இதழுக்கு பேட்டி அளித்தனர்.
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவும் காதலித்து வருகின்றனர் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீபத்தில் 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் வைத்து தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், இருவருக்கும் சொந்த பந்தங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அதிதி ராவ், நடிகர் சித்தார்த் திருமணத்திற்கு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
திருமணத்திற்கு முன் இருவரும் சேர்ந்து, வோக் என்ற செய்தி இதழுக்கு பேட்டி அளித்தனர். இந்த நகைச்சுவையான நேர்காணலின்போது, திருமணத்திற்கு வராமல் போய் விட்டால், சித் என்ன செய்வார்... என கேட்பதற்கு முன், சித்தார்த் உடனடியாக முன்வந்து, வாடி போய் செத்து விடுவேன் என கூறினார்.
திருமண நாளன்று காலையில் அதிதி முதலில் செய்த காரியம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சித்தார்த், நன்றாக உறங்கி கொண்டிருந்தேன். என்னுடைய ஒப்புதல் இல்லாமல், என்னுடைய விருப்பத்திற்கு எதிராக, அதிதி என்னை எழுப்பினார்.
எனது நாள் தொடங்கி விட்டது என தயக்கத்துடனும், அழுகையுடனும் நான் எழுந்தேன். ஒரு குழந்தையிடம் இருந்து மிட்டாயை பறித்து கொண்டது போல், உலகத்தில் இந்த தருணத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கும் நபரென்றால் அது அதிதிதான் என்றும் கூறியுள்ளார்.