வசூலை குவிக்கும் அனன்யா பாண்டே குரல் கொடுத்த இன்சைடு அவுட் 2
|இன்சைடு அவுட் 2 என்ற அனிமேஷன் படத்திற்கு பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே குரல் கொடுத்துள்ளார்.
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே. இவர் தற்போது பிரபல அனிமேஷன் படமான இன்சைடு அவுட் 2 என்ற அனிமேஷன் படத்தில் ரிலே என்ற கதாபாத்திரத்திற்கு இந்தியில் குரல் கொடுத்துள்ளார். இப்படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
தற்போது, இப்படம் வெளியாகி இரண்டு வாரங்களை கடந்தநிலையில் மிகப்பெரிய வசூல் சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. அதன்படி, இன்சைடு அவுட் 2 படம் தற்போதுவரை $100 மில்லியன் வசூலை குவித்துள்ளது.
இதற்கு முன்பாக தி சூப்பர் மரியோ புரோஸ் என்ற அனிமேஷன் படம் வெளியான 2வது வாரத்தில் $92 மில்லியன் வசூலை குவித்து சாதனை படைத்திருந்தது. தற்போது இன்சைடு அவுட் 2 வெளியான 2 வாரத்தில் அதிக வசூலை பெற்ற அனிமேஷன் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
முன்னதாக இப்படத்திற்கு குரல் கொடுத்தது குறித்து அனன்யா பாண்டே கூறியதாவது,
."தற்போது என் சிறுவயது கனவு நனவாகியுள்ளது. டிஸ்னி மற்றும் பிக்சர் எல்லாம் நான் பார்த்து வளர்ந்தவை. இந்த திரைப்படங்கள் குழந்தைகளுக்கானது என்று கூறுகிறார்கள், ஆனால் நீங்கள் பெரியவராக இதைப் பார்க்கும்போது உங்களுக்கு இன்னும் நிறைய புரியும். "
எனக்கு இதில் குரல் கொடுப்பது மிகவும் சவாலாக இருந்தது. நான் படங்களில் மட்டுமே குரல் கொடுத்துள்ளேன். இது போன்ற ஒன்றை நான் ஒருபோதும் செய்ததில்லை. இதற்கு முதன்முதலில் குரல் கொடுத்தபொது குழந்தைபோல் இல்லை. அதனால், அந்த குரலை கொண்டு வருவது எனக்கு கடினமாக இருந்தது' இவ்வாறு கூறினார்.