< Back
சினிமா செய்திகள்
தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்
சினிமா செய்திகள்

தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்

தினத்தந்தி
|
14 Oct 2024 7:24 AM IST

இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

சென்னை,

'ராயன்' படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 51-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். சேகர் கம்முலா இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், இதில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு 'குபேரா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து, மும்பை பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத்தொடர்ந்து நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு மகாசிவராத்திரி நாளான பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்