'கேம் சேஞ்சர்' படத்தின் புதிய பாடல் குறித்த தகவல்
|ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் வருகிற டிசம்பர் 20-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தநிலையில், இசையமைப்பாளர் தமன் `கேம் சேஞ்சர்' படத்தின் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கேம் சேஞ்சர் படத்தின் புதிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில், கேம் சேஞ்சர் படத்தின் இரண்டாவது பாடலான " ரா மச்சா மச்சா " என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த பதிவை படக்குழு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. பாடலின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருந்தாலும், பாடல் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று ஊகிக்கப்படுகிறது.
இதனையடுத்து, ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'ஆர்.சி 16' என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.