தோல்வி படம் மட்டுமே...- இருந்தும் ஷாருக், சல்மானை விட அதிக கார் வைத்திருக்கும் நட்சத்திரம்
|பல நட்சத்திரங்கள் பெரிய பங்களாக்கள், பல சொகுசு கார்களை வைத்திருக்கிறார்கள்.
சென்னை,
இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பெரும் பணக்காரர்களாக உள்ளனர். அதில், பல நட்சத்திரங்கள் பெரிய பங்களாக்கள் மற்றும் ஸ்வாங்கி கார்களை வைத்திருக்கிறார்கள். ஆனால், இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்திய சினிமாவில் அதிக சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகர், ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பதும் அந்த படமும் தோல்வி அடைந்தது என்பதும் உங்களுக்கு தெரியுமா?
ஆம், அந்த நடிகர் வேறுயாரும் இல்லை, லெஜண்ட் சரவணன்தான். இவர், ஷாருக்கான், சல்மான் கான், ரன்பீர் கபூர், அல்லு அர்ஜுன் போன்ற சூப்பர் ஸ்டார்களை விட அதிக சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.
இந்தியாவில் எந்த நடிகரிடமும் இல்லாத அளவுக்கு, ஒன்றல்ல மூன்று ரோல்ஸ் ராய்ஸ் செடான் கார்கள், லம்போர்கினி ஹுராகன், பெராரி 488, பென்ட்லி கான்டினென்டல் ஜிடி, ஆஸ்டன் மார்ட்டின் டிபி11, லம்போர்கினி யூரஸ், பென்ட்லி ப்ளையிங் ஸ்பர் மற்றும் போர்ஷே 911 டர்போ எஸ் போன்றவற்றை வைத்திருக்கிறார்.
லெஜண்ட் சரவணன் என்று அழைக்கப்படும் சரவணன் அருள் ஒரு தொழிலதிபர் ஆவார். இவர் நடித்த ஒரே படம் 'தி லெஜண்ட்'. ஊர்வசி ரவுட்டேலா, விவேக், யோகி பாபு, சுமன், நாசர், விஜய்குமார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்தனர். இருப்பினும், இப்படம் வசூலில் தோல்வியடைந்தது. இன்றுவரை சரவணனின் ஒரே திரைப்படம் இதுவாகும்.