'இந்த ரீல்ஸ் உலகத்தில் அனைவருக்கும்...' - நடிகை மயூரி காயத்திரி
|தொடர்ந்து நடிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ள முடியும் என்று நடிகை மயூரி காயத்திரி கூறினார்.
சென்னை,
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மயூரி காயத்திரி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ராவ் நடிப்பில் வெளியான 'கிருஷ்ண லீலா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சிறந்த கன்னட நடிகைக்கான விருதுக்கும் இப்படத்தில் நடித்ததற்காக பரிந்துரைக்கப்பட்டார்.
பின்னர், தனது நீண்டகால காதலரான அருணை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது அனைவருக்கும் நடிகர் ஆகும் ஆசை இருப்பதாக நடிகை மயூரி காயத்திரி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இந்த ரீல்ஸ் உலகத்தில் அனைவருக்கும் நடிகர் ஆகும் ஆசை இருக்கிறது. அதற்கு நம்மிடம் ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி அவசியம். நடிக்கும் திறனை வளர்ப்பதற்கு தொலைக்காட்சி ஒரு சிறந்த மேடையாக இருக்கும். இதன் மூலம் ரசிகர்களுடன் இணைந்து இருக்க முடியும். தொடர்ந்து நடிப்பதன் மூலம் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளவும், வளரவும் முடியும், 'என்றார்